பிக்பாஸ் அல்டிமேட்டில் குக் வித் கோமாளி நட்சத்திரம்... யாரும் எதிர்பார்க்காத ஒருவர்... யார் தெரியுமா...?

பிக்பாஸ் அல்டிமேட்டில் குக் வித் கோமாளி நட்சத்திரம்… யாரும் எதிர்பார்க்காத ஒருவர்… யார் தெரியுமா…?

Cinema

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆன புகழ் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். தற்போது வெளியான அஸ்வின் ஹீரோவாக நடித்த என்ன சொல்லப் போகிறாய் படத்திலும் அவர் காமெடியனாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனம் தான் கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் அடுத்து அஜித்தின் வலிமை ரிலீசுக்காக அவர் காத்திருக்கிறார். ஆனால் கொரோனா காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அதுவும் தள்ளிப் போய் விட்டது. மேலும் தற்போது புகழ் கைவசம் விஜய் சேதுபதி படம் மட்டுமே இருக்கிறது.

தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் புகழ் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

-Advertisement-

முந்தைய சீசன் போட்டியாளர்கள் மட்டுமே வர இருப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது புகழ் இணைந்திருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்து இருக்கிறது.