வேறொரு பெண்ணை காதலித்த தனுஷ்... மனைவி ஐஸ்வர்யாவிற்கு உண்மை தெரிந்ததால் தான் இந்த பிரிவா...? வெளியான உண்மை... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!!

வேறொரு பெண்ணை காதலித்த தனுஷ்… மனைவி ஐஸ்வர்யாவிற்கு உண்மை தெரிந்ததால் தான் இந்த பிரிவா…? வெளியான உண்மை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Cinema

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 ஆண்டுகள் கழித்து தற்போது பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பழைய பேட்டிகள் பற்றி தற்போது பேசப்படுகிறது.

முன்பு ஒரு முறை பேட்டியில் தனுஷ் கூறியதாவது, எனக்கு 16 வயது இருந்த போது ஒரு பெண்ணை எனக்கு பிடித்தது. அது தான் என் முதல் காதல். அந்தப் பெண் வேறு ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

நான் அவரை பின் தொடர்ந்தேன். அந்த வயதில் ஒரு பெண்ணுக்காக ஒரு பையன் என்னவெல்லாம் செய்வானோ அதை எல்லாம் நான் செய்தேன். முதலில் அவர் என் காதலை ஏற்றார். பின்னர் ஓராண்டு கழித்து என்னை கழற்றி விட்டார்.

-Advertisement-

எனக்கு அது தான் முதல் காதல். அவர் என்னை பிரிந்த சென்ற பிறகு ஒரு வேளை அது கிரஷ்ஷாகதான்  இருக்குமோ என்று நான் ஆண்டுக் கணக்கில் நினைத்தேன். அப்போது எனக்கு தெரியவில்லை. ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்தே அது காதல் என்பதை நான் உணர்ந்தேன்.

என் முதல் காதல் பற்றியும், பிறகு அது தோல்வி அடைந்தது பற்றியும் என் மனைவி ஐஸ்வர்யாவுக்குத் தெரியும். நாங்கள் காதலித்துக் கொண்டிருக்கும் போதே என்னுடைய முதல் காதல் பற்றி ஐஸ்வர்யாவிடம் நான் கூறி விட்டேன்.

அந்த ஓராண்டு காலம் எப்பொழுதுமே என் வாழ்வின் பொன்னான காலமாக இருக்கும் என்று மனைவி ஐஸ்வர்யாவிடம் தெரிவித்தேன். எப்போதும் நேர்மையாக இருப்பது நல்லது தானே என்றார்.