பிக்பாஸ் தாமரை செல்வியை சுற்றி வளைத்த பொதுமக்கள்... அதிர்ச்சியில் தாமரைச்செல்வி..!! அடுத்து என்ன நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ!!

பிக்பாஸ் தாமரை செல்வியை சுற்றி வளைத்த பொதுமக்கள்… அதிர்ச்சியில் தாமரைச்செல்வி..!! அடுத்து என்ன நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ!!

Cinema Video

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவாய்ப்புகள் கூட கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த ஷோ ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் தொடங்கி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

இந்த சீசனில் இமான் அண்ணாச்சி தொடங்கி, தொகுப்பாளர் பிரியங்கா வரை மக்களுக்கு மிகவும்  பிடித்த பலரும் இந்த ஷோவில் இருந்தார்கள். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தாமரைச் செல்வி மிகவும் சிறப்பாக விளையாடினார். நாட்டுப்புறக் கலைஞரான தாமரைச் செல்வி, இறுதிப் போட்டிக்கு முந்தைய வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

சமையல் செய்வதிலும் தாமரைச் செல்வி வல்லவர்தான். பிக்பாஸ் இல்லத்தில் பலருக்கும் தாமரைச் செல்வியின் சமையல் மிகவும் பிடிக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரிசு எதுவும் கிடைக்காமல் சாதாரண ஆட்டோவில் ஏறித்தான் வீட்டுக்குப் போனார் தாமரைச் செல்வி. இதன் மூலம் இந்த சீசனில் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார் தாமரைச் செல்வி.

-Advertisement-

அண்மையில் தாமரைச் செல்வி பீச்சுக்கு காற்று வாங்கப் போனார். அங்கே அவரை அடையாளம் கண்டு கொண்ட மக்கள் அவரை சுற்றி வளைத்து அன்பு மழை பொழிந்து விட்டனர். அதைப் பார்த்து நெகிழ்ந்தே போனார் தாமரைச் செல்வி. அவரோடு செல்பி எடுப்பதும், ஆட்டோகிராப் வாங்குவதுமாக இருந்தனர். அதைப் பார்த்து தாமரைச் செல்வி எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல..என நா தளு, தளுத்தார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.