எளிமையாக திருமணத்தை முடித்த பிரபல இயக்குனர்... மணப்பெண் யார் தெரியுமா...? அடடே இந்த பிரபலமா என வாழ்த்துக்களை கூறி வரும் ரசிகர்கள்..!!

இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் தான் இயக்கிய அருவி திரைப்படம் மூலமாக சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அருவி படத்தின் இமாலய வெற்றி, இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வெளிச்சத்தைக் கொடுத்தது.

அந்த படத்துக்கு பின்னர் அவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் அருண் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இப்போது இருக்கிறார். இதற்கிடையில் டீனா என்கிற பெண்ணை அவர் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மணக்கோலத்தில் அந்தப் பெண்ணுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அருண் பிரபு சிவகார்த்திகேயனுக்கு ஒரு வகையில் தம்பி முறை உறவுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

By re v

Leave a Reply

Your email address will not be published.