தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய இளம் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் வெற்றி. இவர் நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட திரைப்படங்கள் அனைவரிடமும் மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது.
மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வனம் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது அனைவரிடமும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென பிரபல நடிகர் வெற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலியில் நடந்த இவரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.