பிரபல நடிகர் ஹரிஷ் உத்தமன் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து பிரபலமாகி இருப்பவர். சின்ன பட்ஜெட் படங்களில் இருந்து அதிக பட்ஜெட் படங்கள் வரை அவர் நெகடிவ் ரோல்களில் தோன்றி இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் அவரை நாம் அதிகம் பார்க்கலாம்.
கடந்த 2018ம் ஆண்டு ஹரிஷ் மும்பையை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அம்ரிதா கல்யாண்பூர் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்கள் ஒரே வருடத்தில் முழுவதுமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது ஹரிஷ் உத்தமன் இரண்டாம் திருமணம் செய்துள்ளதாக புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மிகவும் ரகசியமாக மற்றும் எளிமையாக ரெஜிஸ்டர் ஆபிசில் இவரது இரண்டாம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. சின்னு குருவில்லா என்பவரை தான் ஹரிஷ் இரண்டாவதாக காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.