அஜித்துக்கு ஜோடியாக நடிக்க போகும் விஜய் பட நடிகை..?? அட, இவரா என அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Cinema

அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகியுள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தான் தயாரித்திருக்கிறார். இம்மாதம் வெளியாவதாக இருந்த இத்திரைப்படம், கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தள்ளிப்போய் உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் 61வது படத்தின் முதற்கட்ட வேலைகள் தற்போது துவங்கியுள்ளதாம். இப்படத்தையும் எச். வினோத் தான் இயக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, பிரபல பாலிவுட் கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். மேலும், நடிகை பூஜா ஹெக்டேவிடமும் அஜித்61 படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டே தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-