மறைந்த தனது காதலி தோற்றத்தில் இருப்பதாகக் கூறி, வெள்ளை நிற நாகப் பாம்புடன் காதலன் வசித்து வரும் சம்பவம் சிங்கப்பூரில் ஆச்சரியத்தை அளித்துள்ளது.இறந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் வோரணன் சரசலின். இவரது காதலி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதை டுத்து இயர் ஒரு வெள்ளை நிற நாகப்பாம்பை பார்க்க நேர்ந்தது. அந்தப் பாம்பு தனது மறைந்த காதலி தோற்றத்தில் இருப்பதைப் போல உணர்ந்தவர் அதனுடன் அதிக நேரம் செலவு செய்கிறார் என்பதை விட, அதனுடன் வாழ்கிறார் என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு எங்கு சென்றாலும் அதையும் தன்னுடன் அழைத்து செல்கிறார். அதனுடன் விளையாடுகிறார். டிவி பார்க்கும்போது அருகில் அமர வைத்துக் கொள்கிறார். அதனுடன் தினமும் பேசுகிறார்.
சிங்கப்பூர் ஏரிக்கு சென்றுள்ளார். அங்கும் இவர் அந்தப் பாம்புடன் அமர்ந்து இருப்பதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புத்த மதத்தில், இ றந்தவர்கள் விலங்குகளாக மறுபிறவி எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால், இ றந்த தனது காதலி பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளார் என்று நம்பி வருகிறார்.
இந்தப் பாம்பு தனக்கு கிடைத்தது ”உண்மையான காதல் தோற்றுப் போவதில்லை. எனது காதலிதான் மறுபிறவி எடுத்து வெள்ளை நாகப் பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளார்” என்கிறார்.
ஒரு ஹோட்டலுக்கு சென்று இருந்தபோது, ஹோட்டலின் மேல் கூரையில் இருந்து இந்தப் பாம்பு விழுந்ததாகவும், அனைவரும் பயந்து ஓடுகையில் இவர் மட்டும் அதனை எடுத்து வந்து எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்கிறார் என்று அந்த நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
”இந்த மாதிரி உடன் அழைத்து செல்வது தவறு. விலங்குகள் என்றும் விலங்குகள்தான். மிகவும் ஆ பத்தானவை” என்று சிலர் எ ச்சரித்துள்ளனர். ஆனாலும், எங்கு சென்றாலும் பாம்பை உடன் அழைத்து செல்கிறார்.