தனது 14 வயதில் இருந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்கள் தீர்ப்பு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். இதன்பின் விஜய் டிவியில் தொடர்ந்து பல நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு காப்பி வித் டிடி எனும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி தான் டிடி-க்கு மிகப்பெரிய பெயரை சின்னத்திரையில் ஏற்படுத்தி தந்தது.

தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து Speed Get Set Go! எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார் டிடி. மேலும் தற்போது விடுமுறையில் இருக்கும் டிடி, தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது சமீபத்தில் பாரிசில் உள்ள சாப்பாட்டு கடைக்கு சென்றுள்ளார். அங்கு, சாப்பிட ஒரு பீட்சாவை வாங்கியுள்ளார். அந்த பீட்சாவை சாப்பிட்டுவிட்டு, இதை செய்தவரை நான் பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். உடனடியாக அந்த பீட்சா செய்த செஃப்பை பார்த்து, ‘ இதுவரை நான் இப்படியொரு பீட்சாவை சாப்பிட்டதில்லை, ரொம்ப நன்றி. நான் உங்களை திருமணம் செய்துகொள்ள விருபுகிறேன் ‘ என்று குறும்பு தனமாக பேசியுள்ளார் திவ்யதர்ஷினி.

டிடி தன்னுடைய பல வருட நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, அதன்பின் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

By re v

Leave a Reply

Your email address will not be published.