இந்த வாரம் குரு பார்வையின் அதிர்ஷ்டம்.. இந்த ராசியினர்களுக்கு கிடைக்கப்போகும் அபரிதமான யோகம்!

astrology

மேஷம், முதல் மீனம் வரை ஆகிய ராசிக்காரர்களுக்கு 2021 நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை காலம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.

இந்த வாரம் உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சோர்வின் காரணமாக உங்களின் இந்த வார வேலைகள் முடியாமல் போகலாம்.

ரிஷபம்

ரிஷ ராசியினர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். இந்த வாரம் உங்களது நிதி நிலை உயர்வாக இருக்கும். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு உத்தியோகத்தில் வெற்றியடைவீர்கள். சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு நன்மைகளைத் தரும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசியினர்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தால் நல்ல ஆதரவை பெறுவீர்கள். மனைவியுடனான உறவு நன்றாக இருக்கும்,. பணிச்சுமை அதிகரிக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு இந்த வாரத்தில் பரிசுகள் மற்றும் மரியாதை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்ப்படக்கூடும்.

கன்னி

ராசியினர்களுக்கு இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகளும் இந்த வாரம் உங்களுடையவர்களாக மாறலாம். வாரத்தின் நடுப்பகுதியில் உங்களுக்கு உடல் மற்றும் மன உளைச்சல் ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசியினர்களுக்கு இந்த வாரத்தில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் தரும். பணியிடத்தில் உள்ளவர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர்கள் தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த வாரம் வேலை அதிகமாக இருக்கலாம். வணிக வகுப்பினருக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியினர்கள், இந்த வாரம் குடும்ப விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மனைவியுடன் அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் நிதி நிலை பலவீனமாக இருக்கலாம்.

மகரம்

மகர ராசியினர்கள் இந்த வாரம் உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இந்த வாரம் இனிமையாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியினர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் கூடும். இந்த வாரம் சகோதர சகோதரிகளால் சில நல்ல பலன்களைப் பெறலாம்.

மீனம்

மீன ராசியினர்களுக்கு பணம் சம்பந்தமான விஷயங்களில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் வசதிகள் அதிகரிக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் கடினமாக இருக்கும்.