2021 பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு… இந்த வருடம் எப்படி இருக்கும்…? பேரழிவு நிச்சயம்… ஜோதிடர்களுக்கே அதிர்ச்சி கொடுத்த பஞ்சாங்கம்…!!

2021 பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு... இந்த வருடம் எப்படி இருக்கும்...? பேரழிவு நிச்சயம்... ஜோதிடர்களுக்கே அதிர்ச்சி கொடுத்த பஞ்சாங்கம்...!!

ஒரு வருட காலம் முடிந்த பிறகும் கூட கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து உலகம் இன்னமும் மீளாத நிலையில் தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று இந்தியாவின் வடகிழக்கு திசையில் உள்ள நாடுகளில் இருந்து வேகமாக பரவும் என்று இந்த பிலவ புது வருட தமிழ் பஞ்சாங்கம் தற்போது கணித்துள்ளது.

பல விஷயங்களில் பஞ்சாங்கத்தின் கணிப்புகள் பலித்துள்ளன. அதேபோல் இந்த பிலவ வருட தமிழ் பஞ்சாங்கத்தில் பல பொக்கிஷங்களை இந்திய அரசு கையகப்படுத்தும் என்றும் கூட பஞ்சாங்கம் கணித்துள்ளது. நேற்று மங்களகரமான பிலவ வருடம் பிறந்துள்ளது.

இந்த ஆண்டின் ராஜா செவ்வாய், மந்திரி புதன், அர்க்காதிபதி, மேகாதிபதி,சேனாதிபதி செவ்வாய், ரஸாதிபதி சூரியன், ஸஸ்யாதிபதி , நீரஸாதிபதி சுக்கிரன்.

இந்த வருடத்தின் வருஷ தேவதையாக லட்சுமி நரசிம்மர் ஆக வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு ராஜவாக பூமிகாரகனாகிய  செவ்வாய் வருவதால் அரசாங்கத்திற்கு பூமியில் உள்ள பல இடங்களில் கனிம பொருட்கள் புதையலைப் போல கிடைக்கும்.

சுரங்கம், ஆழ்கடல் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று பல பொக்கிஷங்களை அரசு கையகப்படுத்தும். இந்தியாவின் வட கிழக்கு திக்கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கொலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் சென்ற வருடத்தை விட அதிகமாக வேகமாக பரவும்.

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் புதுவகையான வைரஸ் நோயினால் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த ஆண்டில் பல விதமான புதிய தொழில்கள் உருவாகும்.

உலக அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கு பல வகையான சலுகைகள் கிடைக்கும். அது மட்டுமின்றி பணம் தொடர்பான மோசடிகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு எதிரான பல பாலியல் குற்றங்கள், பெண் கடத்தல்கள் அதிகரிக்கும். திருட்டுகள் அதிகமாகும். சட்டத்தின் பிடியில் திருடர்கள் சிக்குவார்கள். அவர்களுக்கு கடுமையான எதிர்பார்க்காத வித்தியாசமான தண்டனை கிடைக்கும்.

செவ்வாய் மற்றும் சனி தொடர்பு காரணமாக புரட்டாசி, கார்த்திகை, பங்குனி ஆகிய மூன்று மாதங்களில் விபத்துகள், போராட்டங்கள் அதிகம் நடைபெறும். இந்தியாவில் சாலை விபத்துகள், தீ விபத்துகள் பெருமளவில் நடைபெறும் எனவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *