வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தலைப்புண்கள் வராமல் பாதுகாக்க இந்த இயற்கை பொருள்களை இப்[படி பயன்படுத்துங்கள்…!!

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தலைப்புண்கள் வராமல் பாதுகாக்க இந்த இயற்கை பொருள்களை இப்[படி பயன்படுத்துங்கள்...!!
பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தலையில் முடி இல்லை என்றால் மனது மிகவும் வருத்தப்படும். ஏனெனில் ஆணுக்கும் தலையில் முடி இல்லை என்றால் அவர்களை வழுக்கை என்று கிண்டலடிப்பார்கள். எனவே நாம் தலையை பராமரிப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களால், நம் தலையில் புண் உண்டாகி அவதிப்பட காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம் போல் தலையின்  தோல் மீது படர்ந்து விடுவதால் அவை தலைப்புண்களை உண்டாக்கலாம்.
இந்த தலை புண்களை சில இயற்கை நிவாரணிகளை கொண்டு தடுக்கலாம். அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

வேப்ப இலை

வேப்ப இலைகள் தோல் மற்றும் சரும ரோகங்களுக்கு சிறந்த நிவாரணி ஆகிறது. இது தோல் வியாதிகளான எஸிமா, சொரியாசிஸ், புழுக்கள்  மற்றும் வார்ட்ஸ்  போன்றவற்றிக்கு நல்ல மருந்தாகிறது.
அதே போல் தலைப்புண்களுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது. இதில் ஆன்டிசெப்டிக் மற்றும்  ஆன்டிபாயடிக் குணங்கள் இருப்பதால்,  தலையில் ஏற்படும் புண்களை விரைவாக ஆற்றிவிடும்.
வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அரைத்து அதை விழுதாக்கி, அந்த விழுதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.  அதே போல் நீருக்கு பதில் சுத்தமான தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம்.
இதை தலையில் தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து,  மறுநாள் காலை ஷாம்பு போட்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

மருதாணி

மருதாணி இயற்கையாகவே தலைமுடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், தலைப்புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்கவும்  உதவுகிறது.
எந்த தலைமுடி பிரச்சனைக்கும்  மருதாணியை அரைத்து விழுதாக்கி தடவுவது மிகச்சிறந்த இயற்கையான தீர்வாகும்.

சோற்று கற்றாழை

சோற்று கற்றாழையின் சதை பகுதியையும், எலுமிச்சை சாறும் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு ஷாம்பூ போட்டு  கழுவி  விடவும்.
வெறும் சோற்று  கற்றாழையின் சோற்றுப்பகுதியை தனியாக எடுத்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்படியே தடவலாம். கொஞ்ச நேரம் ஊறிய பிறகு மிதமான சுடுதண்ணிரில்  கழுவவும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா தலைப்புண்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலையில் மயிர்கால்கள் அடைபட்டிருக்கும் போது பேக்கிங் சோடா தடவி நன்றாக மசாஜ் செய்து கழுவி விட சீக்கிரம் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *