வீட்டில் 2 பிரியாணி இலையை இந்த மாதிரி செய்ங்க…! 10 நிமிடம் கழித்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க… இன்னைக்கே ட்ரை பண்ணுங்க…!!

வீட்டில் 2 பிரியாணி இலையை இந்த மாதிரி செய்ங்க...! 10 நிமிடம் கழித்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க… இன்னைக்கே ட்ரை பண்ணுங்க...!!

அசைவ உணவு என்றாலே அதில் பிரியாணி இலையின் முக்கியத்துவம் அதிகம். பிரியாணி இலை இல்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலாப் பொருட்கள் முழுமையடையாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிரியாணி இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த பயன்படுத்தக் கூடியது.

இதில் உடலுக்கு நன்மை பயக்கும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பது தற்போது  கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பிரியாணி இலை உணவில் வாசனைக்காக மட்டுமின்றி, நம் வீட்டினுள் சுற்றும் காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தில் இருந்து நமக்கு நிவாரணம் அளிக்கவும் பயன்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், இது நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விஷயமாக இருக்கலாம். ஆனால் இது எந்த அளவு முற்றிலும் உண்மை தெரியுமா.. இப்போது இது குறித்து விரிவாக காண்போம்.

பிரியாணி இலை

தினமும் வீட்டில் 1-2 பிரியாணி இலையை எரித்தால், வீட்டில் சுற்றும் புகை சுத்தமாவதோடு, உங்களது  மனநிலையும் சிறப்பாக இருக்கும். பிரியாணி இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பிரியாணி இலையில் யூஜெனோல் மற்றும் மைர்சீன் என்ற இரு வகையான சேர்மங்கள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே பிரியாணி இலைகளை எரித்த பிறகு, அதிலிருந்து வெளியாகும் வாசனை மூளையின் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, டென்சனை நீக்குகிறது.

பிரியாணி இலைகளின் லேசான புகை ஒவ்வாமை உள்ள நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனென்றால் இது மூக்கு மற்றும் தொண்டையில்  வீக்கங்கள் இருப்பின் அதை நீக்குகிறது.

உங்கள் வீட்டினுள் ஏதேனும் துர்நாற்றம் வீசினால், அதை நீக்க பிரியாணி இலை ஒன்றே போதும். அது பெரிதும் உதவி புரியும். கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த ஏர் பிரஷ்னர்களை வாங்கி உபயோகப் படுத்துவதற்கு பதிலாக, பிரியாணி இலையை பயன்படுத்துவது சிறந்தது.

பிரியாணி இலையில் லினாலூல் என்னும் தனித்துவமான பொருள் உள்ளது.  இதனால் பிரியாணி இலையை வீட்டில் எரிப்பதால், மன அழுத்தம் மற்றும் மன கவலையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

வீட்டில் பிரியாணி இலையை எரிக்கும் சரியான வழி என்ன என்பதை பார்க்கலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 அல்லது 3 நன்றாக உலர்ந்த பிரியாணி இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் வீட்டின் அறையில் ஜன்னல் மற்றும் நுழைவு வாயில் கதவுகளை மூடிவிட்டு, பிரியாணி இலையில் நெருப்பை மூட்டிவிட்டு, அறையை மூடிவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்.

10 நிமிடம் கழித்து, அந்த அறைக்குள் சென்று, நன்கு ஆழமாக சுவாசியுங்கள். இப்படி ஒரு 5 முதல் 7 முறை அந்த அறைக்குள் சென்று வாருங்கள். அதன் பிறகு  உங்கள் உடலில் ஒருவித மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *