பிரபல கிரிக்கெட் வீரர் வீராட்கோலி அனுஷ்கா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்தது… என்ன குழந்தை தெரியுமா…? கொண்டாடும் ரசிகர்கள்…!!

பிரபல கிரிக்கெட் வீரர் வீராட்கோலி அனுஷ்கா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்தது... என்ன குழந்தை தெரியுமா...? கொண்டாடும் ரசிகர்கள்...!!

பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கும், அவரது மனைவியாகிய நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பமானார், அவரின் பிரசவத்தின் போது கணவர் உடன் இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் இருந்து பாதியில்  வெளியேறி  அவருடைய சொந்த ஊர் திரும்பினார்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை கோலி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். குழந்தையும், அனுஷ்காவும் நலமுடன் இருப்பதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *