பிச்சையெடுத்துக் கொண்டிருந்த கண் தெரியாத பாட்டியை சிறு தொழிலாளியாக மாற்றிய இளைஞர்… அப்படி என்ன செய்தார் … தற்போது அந்த பாட்டி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா…?

பிச்சையெடுத்துக் கொண்டிருந்த கண் தெரியாத பாட்டியை சிறு தொழிலாளியாக மாற்றிய இளைஞர்... அப்படி என்ன செய்தார் ... தற்போது அந்த பாட்டி என்ன தொழில் செய்கிறார் தெரியுமா...?

பொதுவாக பிச்சை எடுப்பவர்களில் அதிகமானோர் கோவில்களில் இருப்பதுதான் வழக்கம். அதேபோல் வழக்கமாக நாம் சாலையில் செல்லும் போது கூட வழியில் பிச்சையெடுக்கும் பலரை பார்த்திருக்கிறோம். பார்த்தாலும் அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஒருசிலரை பார்க்கும்போது பரிதாபப்பட்டு அய்யோ பாவம் என சில நேரங்களில் பாக்கெட்டில் இருக்கும் சில்லரை காசை எடுத்துக் கொடுப்போம். அவ்வளவுதான் நாம் செய்யக்கூடியது. ஆனால் இங்கே ஒரு இளைஞர் செய்திருக்கும் செயலை வேற லெவல் என்றே சொல்லி விடலாம்…

யார் அந்த இளைஞர் . அப்படி அந்த இளைஞர் என்ன செய்து இருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள கீழே  தொடர்ந்து படியுங்கள். சென்னையில் சப்வே எனப்படும் சுரங்கப்பாதை ஒன்றில் கண் தெரியாத பாட்டி, நின்று பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தார்.

அதை அந்த சப்வேயின் வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் அங்கு பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் பாட்டியைப் பார்த்தார். அந்த பாட்டியை பார்த்து விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே கையில் ஒரு பொருளுடன் வந்தார் அந்த வாலிபர். அதற்குள் எடை பார்க்கும் மிஷின் இருந்தது.

அந்த மிஷினை பார்வையற்ற அந்த பாட்டிஇடம் கொடுத்து சப்வேயில் ஒரு ஓரமான இடத்தில் அமர வைக்கிறார் அந்த வாலிபர்.  அதுவரை வெறுமனே பிச்சையெடுப்பவராக மட்டுமே இருந்த அந்த பாட்டியை சிறிது நேரத்தில் எடை பார்க்கும் மிஷின் கருவியை  வாங்கிக் கொடுத்து ஒரு சிறிய தொழில் செய்பவராக மாற்றினார் அந்த இளைஞர்.

தொடர்ந்து அந்த சப்வேயில் நடந்து செல்லும் பலரும் தங்களது எடையை பார்த்து விட்டு 1 ரூபாய், 2 ரூபாய் என எடை பார்த்ததற்கான காசை பாட்டியிடம் கொடுக்கின்றனர்.

பிச்சையெடுக்கும் போது பாட்டிக்கு  கிடைத்த பணத்தை விட இப்போது கண் தெரியாத பாட்டி கூடுதலாக 20 முதல் 30 ரூபாய் அதிகமாக சம்பாதிக்கிறார். இளைஞரின் இந்த மாறுபட்ட சிந்தனை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *