குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது நாம் சில விஷயங்களை கவனிக்க தவறி விடுகிறோம்… அப்படி தவற விடும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா…?

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும்போது நாம் சில விஷயங்களை கவனிக்க தவறி விடுகிறோம்... அப்படி தவற விடும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா...?
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயமல்ல. குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை ஒவ்வொரு மாதத்திலும் சரியான உணவை கொடுக்க வேண்டும். இல்லையெனில் அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாகவே சமைத்த உணவை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.
அப்படி  இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும். இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும்.

குழந்தைகள் 7 அல்லது 8 வயதை அடைந்தவுடன் அதிகாலையில் எழுப்புங்கள். குழந்தைகள் எழுந்தவுடன் ஏதாவது ஒரு செயலை செய்ய வையுங்கள். அசைவ உணவு கொடுப்பதை  முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.
எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுங்கள். அவ்வாறு கொடுப்பதுதான் குழந்தைகளுக்கு நல்லது.
எந்த அளவு முடியுமோ அந்த அளவு அதிகமாக காய்கறிகள், பழங்கள், முளை கட்டிய தானியங்களைக் கொடுப்பது நல்லது.
அந்த வகையான உணவுகள் தான் அவர்களை இன்னும் அதிக துடிப்பானவர்களாகவும், உயிர்ப்புள்ளவர்களாகவும் ஆக்கும்.
வெள்ளைப் பூசணியின் சாறெடுத்து தேன் கலந்து தினமும் குழந்தைக்கு கொடுப்பது வளரும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாக இருக்கும்.
இதன் மூலம்  அவர்களது கற்கும் திறனும், உடல் மற்றும் மூளை வளர்ச்சியும் மேம்படும்.
ஒரு சில குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்தல்,ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வெள்ளை பூசணி தவிர்த்து விடுவது நல்லது.
குளிர்பானங்கள், ஐஸ் கிரீம்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் கொண்ட மசாலா அடங்கிய உணவுகளை கடைகளில் வாங்கி உண்பதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை குழந்தைகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் தம்முடைய கருத்துக்களை அவர்கள் மேல் கட்டாயப்படுத்தி திணிப்பதை விட்டு விட்டு, தங்களுடைய குழந்தைகள்  தனது திறனை தானே கண்டறிந்து செயல்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *