காலில் தங்கத்தை பெண்கள் அணிவதில்லை.. இதன் இரகசியம் என்ன தெரியுமா? இது தான் காரணமாம்…

காலில் தங்கத்தை பெண்கள் அணிவதில்லை.. இதன் இரகசியம் என்ன தெரியுமா? இது தான் காரணமாம்…

தங்கத்தை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். மகாலட்சுமி மிகவும் விருப்பப்பட்டு தங்கும் இடங்களில் தங்கமும் ஒன்று.

எனவேதான் பெண்கள் கண்டிப்பாக தங்களது உடலில் ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும் என்கிறார்கள் நம் முன்னோர்கள் .  தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனிதத் தன்மையை தருவதாக சான்றோர்கள் சொல்லி உள்ளனர்.

தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்ற காரணத்தால் அதை ஆபரணங்களாக செய்து கால்களில் அணியக் கூடாது. கொலுசு, மெட்டி போன்ற ஆபரணங்களை வெள்ளியில்தான் அணிய வேண்டும்.

இடுப்பில் தங்க ஆபரணங்கள் அணியலாம் தவறில்லை. தங்க ஆபரணங்கள் அணிவது அழகுக்காக மட்டும் என்றே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.

தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை சங்க கால நூல்கள் நமக்கு அழகாக கூறியுள்ளன.

தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி இருப்பதால் நமக்கு மனபலம் உண்டாகும்.

காலில் அணியலாமா?

தங்கத்தை லஷ்மி என்று பார்க்கும் காரணத்தால் தான் தங்கத்தை காலில் அணிவதற்கு அன்றைய காலத்து மக்கள் விரும்பவில்லை. மேலும் தங்கத்தை காலில் அணிந்தால் செல்வம் குறைந்து விடும் என கூறப்படுகிறது.

தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. காதில் தங்கம் இருந்தால் கழுத்து நரம்புகள் வலுவாக இருக்கும்.

மோதிர விரலில் தங்கம் அணிந்திருந்தால் கருப்பையும், விந்துவும் வலுவடையும்.

ஆனால், காலில் தங்கம் இருந்தால், வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது.

அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி உடலை சமமாக வைக்கும் வெள்ளியை மட்டுமே காலில் அணிந்து வந்தார்கள். இதுவேதான், பெண்கள் காலில் தங்கம் அணியாததன் ரகசியம் ஆகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *