ஏன் தை 1ம் தேதி பொங்கல் கொண்டாடுகின்றனர் என்று தெரியுமா…? பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் எது தெரியுமா…?

ஆடிப் பட்டம் தேடிப் பார்த்து விதைக்கணும்னு சொல்லுவாங்க. ஆடி மாதத்தில் தேடி விதைத்த நாற்று  பயிராக முற்றி அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும்.

அந்த அறுவடையில் கிடைத்த முதல் புது அரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பதுதான் மகர சங்கராந்தி. மக்கள் எல்லோரும் எதிர்பார்த்து இருப்பது இந்த உத்தராயணம் என்று சொல்லக்கூடிய அயணம் ஆரம்பமாகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை இருக்கும் அயணமாகும்.

மகாபாரத கதையில் போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம்தான் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலன் அளிக்கக்கூடிய அயண மாதமாகும்.

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகும். உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாதப் பிறப்பு தர்ப்பணமும் ஆகும். இவை இரண்டும் எப்போதும் சேர்ந்துதான் வரும்.

பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது மற்றும் மாதப் பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பல சமயங்களில் மக்களுக்கு பல விதங்களில் சந்தேகம் ஏற்படுவது உண்டு.

பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புதுப்பானையை வைத்துப் பொங்கல் வைப்பதென்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

ஆனால் எந்தெந்த லக்னங்களில் பொங்கல் வைக்க உகந்தது என்றால், இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் தான் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும்.

தை முதல் நாள் அன்று மகர மற்றும் கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும்.

இந்த நான்கு மணி நேரத்தில் எந்த நேரம் ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது மிகவும் அவசியமாகும். மகர என்றால் தை மாதத்தையும், கும்பம் என்றால் பானையைக் குறிக்கும் ஆகையால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நேரங்களை நாமும் கடைப்பிடித்தால் நன்மை கிடைக்கும்.

இந்தாண்டு தை 1-ம் தேதி (15.01.2021) வியாழக்கிழமை அன்று மாதப் பிறப்பு ஏற்படுகிறது.

எந்த நேரத்தில் புதுப்பானை வைத்து பொங்கல் வைக்கலாம்?

 

காப்பு கட்ட:
மார்கழி மாதம் 29ம் தேதி – 13.01.2021 – புதன்கிழமை – காலை 9.00 – 10.30

பொங்கல் வைக்க நல்ல நேரம்:
தை மாதம் 01ம் தேதி – 14.01.2021 – வியாழக்கிழமை – காலை 7.30 – 9.00

தை மாதம் 01ம் தேதி – 14.01.2021 – வியாழக்கிழமை – காலை 10.30 – 12.00

 

மாட்டுப் பொங்கல் அன்று பூஜை செய்ய நல்ல நேரம்:
தை மாதம் 02ம் தேதி – 15.01.2021 – வெள்ளிக்கிழமை – காலை 9.00 – 10.30

கனுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:
தை மாதம் 03ம் தேதி – 16.01.2021 – சனிக்கிழமை – காலை 7.30 – 9.00

தை மாதம் 03ம் தேதி – 16.01.2021 – சனிக்கிழமை – காலை 10.30 – 12.00

 

உத்தராயணம் புண்யகால (தை மாத பிறப்பு) தர்ப்பணம் எப்போது?

காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனை அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாதப் பிறப்பு பிதுர் தர்ப்பணத்தை தாராளமாக செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *