பிக்பாஸ் வீட்டில் வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்களில் பலரும் தற்போது ரீஎண்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் பிக் பாஸ் வீடு தற்போது களைகட்டி உள்ளது என்றே சொல்லலாம். இன்னும் சில நாட்களில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

இதில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா மற்றும் கேப்ரியலா என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இறுதி போட்டி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சூட்கேஸை வாங்கி விட்டார்கள் என மக்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. சூட்கேஸ் வாங்கிய போட்டியாளர் யார்? என்னும் விவாதம் சமூக வலைதளங்களில் சூடாக நடைபெற்று வருகிறது.
ஆரி, பாலாஜி இவர்கள் இருவரில் ஒருவர் தான் சூட்கேஸ் வாங்கியதாகவும் ஒரு தரப்பில் பேச்சு அடிபடுகிறது. இதனால் கடைசில அன்பு ஜெயிச்சிரும் போல? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உண்மையிலேயே சூட்கேஸ யாரு வாங்கிருப்பா? நீங்க என்ன நினைக்குறீங்க மக்களே? உங்களால் கணிக்க முடிகிறதா…?
Aari fans enada na bala suitcase vangitan solranga, bala fans enada na Aari suitcase vangitan nu solranga
Anbu jeichurumo 🤔🤔 #BiggBossTamil4— Aswin Sankar (@aswin_loyolite) January 12, 2021