இந்த வயதிலும் மாடர்ன் உடையில் நடிகை நதியா எப்படி உள்ளார் தெரியுமா…? தன் தோழிகளுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ…

இந்த வயதிலும் மாடர்ன் உடையில் நடிகை நதியா எப்படி உள்ளார் தெரியுமா...? தன் தோழிகளுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ...

இன்றும் இளமை மாறாத தோற்றத்துடன் இருப்பவர் நடிகை நதியா. 1980களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்  நடிகை நதியா, அவர் தன்னுடைய தோழிகளை சமீபத்தில் சந்தித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நதியா.

உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து கலக்கியவர். 1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார்.

அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார், அதனைத் தொடர்ந்து அக்கா மற்றும் அம்மா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள  தன்னுடைய தோழிகளான குஷ்பு மற்றும் பூனம் தில்லானை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பினை பகிர்ந்து கொண்ட நதியா, தன்னுடைய நெருங்கிய தோழிகளை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *