ஆரம்பமாகிறது கொரோனா 3வது அலை… அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்! ஏன் தெரியுமா…? பகீர் எச்சரிக்கைத் தகவல்…!!

ஆரம்பமாகிறது கொரோனா 3வது அலை... அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்! ஏன் தெரியுமா...? பகீர் எச்சரிக்கைத் தகவல்...!!

உலகம்  முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது. ஒரு வருட காலமாகவே இதன் தாக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது. தற்போது ஒரு புதிய அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் மிக கொடூரமாக தாக்கும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி செய்தி குறித்து கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் வெளிவந்த தகவல் தற்போது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை ஜுலை மாதத்தில் தான் முடிவுக்கு வரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

முன்பு இல்லாத அளவுக்கு தற்போது அதிகமாக பாதிப்பிற்குள்ளாகி உள்ள உத்திரபிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் விரைவில் தாங்க முடியாத அளவிற்கு சரிவைச் சந்திக்கும் என்று ஆய்வில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மேலும் அக்டோபர் மாதத்தில் கொரோனாவின் 3வது அலை வந்தாலும் ஆச்சர்யமில்லை என்றும் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் பேராசிரியர்கள் கூறியுள்ளார்.

அப்படி வரும் மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும்  விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மக்களுக்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு அதிகமான அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில் பெரியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள தருணத்தில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பதே காரணமாம்.

குழந்தைகளை அதிகளவில் பாதிப்பதால் கனடாவில் 12 வயது முதல் 15 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு உலகிலேயே  முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு அமெரிக்காவும் கூட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

முதல் அலையில் 3 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குழந்தைகள் பாதிப்பு  22 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

இதனால் 3வது அலையின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு நோய் பரவாமல் இருப்பதற்கு இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *