அந்த காலத்தில் திருமணத்தை என்பது வயது வரம்பில்லாமல் செய்தார்கள். 5 வயதில் கூட திருமணம் செய்தவர்கள் கூட உண்டு. ஆனால் இப்போது பெண்கள் கூட 25 வயதில் தான் திருமண செய்கிறார்கள். ஆனால் பருவம் அடைந்த ஒரு ஆண் 23 வயதிலும், பெண் 18 வயதிலும் திருமணம் செய்துக் கொள்ளவது மிகவும் சிறந்தது.

ஆனால் காதல் என்பது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி வயது வித்தியாசம் பார்க்காமல் ஏற்படுவது, அப்படி இருக்கும் போது, ஒரு சிலர் சில சமயத்தில் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை விரும்புவார்கள்.
அப்படி வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்துக் கொள்வது நல்லதா என்று சிலரின் மனதில் பல எண்ணங்கள் ஏற்படும். நீங்கள் கதையே பட வேண்டாம். தன்னை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.
ஆனால் அதன் பிறகு அதனால் தன் வாழ்வில் ஏற்படும் சில சிக்கல்களை எதிர்த்து கொண்டு அவர்களோடு வாழ முடியும் என்று உறுதியான முடிவு எடுத்தப் பின்பு திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது.
வயதில் மூத்த பெண்களை திறுமணம் செய்வதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா?
பெண்களுக்கு தாம்பத்திய உறவு என்பது அவர்களின் மாதவிடாய் நிற்கும் காலம் வரையில் மட்டும் தான் இருக்கும். அதன் பிறகு அவர்களுக்கு மாதவிடாய் நின்று விட்டால், தாம்பத்தியத்தில் அந்த அளவு விருப்பம் இருக்காது.
ஆனால், ஆண்களுக்கு தாம்பத்தில் வயது எதுவும் இல்லை என்பதால், அவர்கள் தங்களின் 80 வயது வரையிலும் கூட தாம்பத்தியத்தில் ஈடுபடும் நாட்டம் அதிகமாக இருக்கும்.
அவ்வாறு விருப்பம் இருக்கையில், ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது, அந்த பெண்ணுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களில் அந்த பெண் விரும்பாத பொது அந்த ஆணுக்கு தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் ஏற்படும்.
அப்போது அந்த பெண்ணிற்கு அதில் விருப்பம் இல்லாததால், அந்த ஆண் வேறு ஒரு பெண்ணை தேடி தவறான வழியில் செல்ல நேரிடுகிறது. இதனால் வாழ்க்கையில் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரிவு நிலைகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகிறது.
மேலும் ஒரு ஆண் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால், கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், அந்த ஆண் தள்ளாத வயதில் அவன் தனித்து விடப்படும் நிலைகள் ஏற்படும்.
எனவே ஒருவரின் திருமண வாழ்வின் போது, மூத்த பெண்ணை திருமணம் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் அதற்கு முன்னால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் , இதை பற்றி நன்றாக ஆலோசித்துக் கொண்டு பின் தெளிவான முடிவு எடுப்பதே மிகவும் சிறந்தது. அப்போது தான் திருமண வாழ்வு சிறக்கும்.