அதிக அளவில் இலாபத்தினைத் தரக்கூடிய மிகவும் பயனுள்ள காப்பீடுகள் எவை?

பொதுக் காப்பீட்டை பொறுத்தமட்டில் இலாபம் கிடையாது…இலாப நோக்கில் பாலிசி வடிவமைக்க படவில்லை…உங்கள்‌ இழப்பை சரிகட்டவே காப்பீடு…நீங்கள் இழப்பிற்கு முன்‌ இருந்த நிலைக்கு கொண்டுவரவே காப்பீடு…இழப்பிற்கு முன் இருந்த நிலையை விட ஒருபடி உயர்வை தருவது காப்பீட்டின் நோக்கம் அன்று…

which-is-best-life-or-term-insurance

இலாபம் என்றில்லாமல் பாதுகாப்பு என்ற ஒற்றை சொல் தான் காப்பீடின் அடிப்படைBASIC OF INSURANCE .

ஊரில் ஒருவர் நான்கு காப்பீடு நிறுவனங்களில் நான்கு விதமான விபத்துக் காப்பீடு பாலிசி எடுத்துள்ளார்…திடீரென விபத்தில் இறந்து போகிறார்…அவருக்கு நான்கு நிறுவனத்தில் இருந்தும் காப்பீடு பலன் கிட்டும்…அந்த தொகை மிக அதிகமாக இருக்கும் இலாபகரமாகவும் இருக்கும்…ஆனால் யாரும்‌ இலாபத்திற்காக சாக முடியுமா?

இயல்பான நிகழ்விற்கே காப்பீடு,பாதுகாப்பிற்கே காப்பீடு,இலாபத்திற்காக ஒருபோதும் பொதுத்காப்பீடு இல்லை…

இதில் ஒரு அடிப்படைத் தவறு உள்ளது. ஐயா, ஓர் அடிப்படைத் தவறு. காப்பீட்டில் லாபம் எதிர் பார்க்கக் கூடாது.காப்பீடு என்பதே, நமக்கு இழப்பு வந்தால் அதைச் சரிக்கட்ட இழப்பீடு தருவது.

insurance benefits in tamil

காப்பீடு செய்யும்போது, எந்தெந்த இழப்புக்கள்/விபத்துக்கள் வரக்கூடும் என்று எண்ணி ஆராய்ந்து காப்பீடு செய்ய வேண்டும். ஒரு வேளை அந்த நிகழ்வு நடக்கவில்லை என்றால் அதுவே நமக்கு லாபம். காப்பீட்டுக் கம்பெனி திருப்பிக் கொடுக்கும் பணம் இதில் அதிகம் என்று தோராயமாகக் கணக்கிடலாம் தான். ஆனால் அதை லாபம் என்று கருதாதீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *